தாலியறுப்பு போராட்டத்தை தொடர்ந்து மற்றொரு போராட்டத்திற்கு நாள் குறித்த வீரமணி இந்துஅமைப்புகள் எச்சரிக்கை !!

தருமபுர மடத்துக்குப் புதிய ஆதினகர்த்தராகப் பதவி ஏற்றுள்ள தவத்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் பட்டினப்ரவேசம் செய்யக்கூடாது எனவும் அப்படி செய்தால் அவர் செல்லும் வழியில் தடுத்து நிறுத்தி மறியல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் திராவிட கழக தலைவர் வீரமணி இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் :-

தருமபுர மடத்துக்குப் புதிய ஆதினகர்த்தராகப் பதவி ஏற்றுள்ள தவத்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் என்பவர் – நீண்ட காலத்துக்கு முன்பே தடை செய்யப்பட்ட – மனிதர்கள் தூக்கும் பல்லக்கில் பவனி வரும் பட்டினப்பிரவேசம் என்னும் – ‘மனித உரி மையைச் சிறுமைப்படுத்தும் நிகழ்ச்சியைப் புதுப்பித்து வருகிறார்’ என்ற தகவல் நமக்குக் கிடைத்துள்ளது.

திராவிட சந்நிதானங்கள் மீது நமக்கு மதிப்புண்டு என்ற போதிலும் கூட, பல்லாண்டுகளுக்கு முன்பே இதே தருமபுர ஆதினத்தில் நடைமுறையில் இருந்த மனிதர்கள் சுமக்கும் பட்டினப்பிரவேசத்தைத் தடுப்பது என்று திராவிடர் கழகம் முடிவு செய்தபோது, தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலையீட்டின் பேரில், கடைசி நேரமானதால் அந்த ஆண்டு மட்டும் நடைபெற்று – அதற்குப்பின் அது நிறுத்தப்பட்டது. பிறகு திருவாவடு துறை ஆதினகர்த்தர் பட்டினப்பிரவேசத்தை நடத்திய போது திராவிடர் கழகத்தின் சார்பில் மறியல் செய்யப் பட்டது, பிறகு நிறுத்தப்பட்டு விட்டது.

இப்பொழுது நீண்ட இடைவெளிக்குப் பிறகு தருமபுர ஆதினகர்த்தர் அதனை புதுப்பிப்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல.
தந்தை பெரியார் கூறிய கருத்தினை ஏற்று சங்கராச் சாரியாரும் கூட, மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் செல்வதைத் தவிர்த்தார் என்பது வரலாறு. இந்த நிலையில் தருமபுர ஆதினகர்த்தர் வரும் 12.2.2020 அன்று மேற்கொள்ள விருக்கும் மனிதர்கள் சுமக்கும் பட்டினப்பிரவேசத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
நியாயமான இந்த வேண்டுகோள் புறக்கணிக்கப் படுமேயானால், பட்டினப் பிரவேசத்தை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் மறியல் செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து இதுவரை கிறிஸ்தவ மதத்தில் பாதிரியார்கள் தொடர்ந்து பல்லாக்கில் வலம்வருவது தொடர்கதையாக மாறியுள்ளது ஆனால் அதனை பற்றி வாய் திறக்காத வீரமணி இந்து மதம் சைவ, வைணவ வழிபாடுகளில் மட்டும் வாய் திறப்பதாகவும்,பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் வீரமணியின் பேச்சினை இப்போது ஆதினம் ஏற்றால் எவரும்காலத்தில் கடவுள் சிலைகளை பல்லாக்கு தூக்க கூடாது அதுவும் மனித உரிமை மீறல் என திராவிட கழகத்தினர் சொல்லும் நிலைக்கு வந்து சேரும் என இந்து அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

©WEB10media

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here