மூன்றாவது முறையாக நாட்டு மக்களுக்கு மோடி உரை ஊடகங்களுக்கு ஆப்பு அடிக்கப்படுகிறது.

கடந்த ஒரு வாரத்திற்குள் பிரதமர் மோடி இரண்டு முறை கொரோனா குறித்து நாட்டு மக்கள் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அரசு ஊழியர்களின் பணி, அரசு எடுத்து வரும் முயற்சிகள் குறித்து நாட்டு மக்களுக்கு அரசு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார்.

இரண்டாவது முறை உரையாற்றிய போது 21 நாட்கள் நாடு முழுவதும் ஒவ்வொரு கிராமமும், நகரமும் முடக்க படுவதாகவும் அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்கு மட்டுமே வெளியே செல்லவேண்டும் எனவும், அனைத்து நிகழ்ச்சிகள் பொது போக்குவரத்து ஆகியவற்றை தடை செய்து உத்தரவு பிறப்பித்தார்.

பிரதமர் மோடி கூறி இன்றுடன் 2 நாட்கள் ஆகிறது நாட்டில் 75 % மக்கள் வீட்டிலேயே முடங்கிவிட்டனர், மேலும் அரசு ஊழியர்கள் காவல்துறையினர், மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் தொடர்ந்து பணி புரிந்து வருகின்றனர், இந்நிலையில் பிரதமர் மோடியின் உத்தரவை பெரும்பாலான மக்கள் பின்பற்றிவரும் நிலையில் ஒரு சில நபர்கள் வேண்டுமென்றே வெளியில் சுற்றி வருவது அரசிற்கும், சாதாரண மக்களுக்கும் அச்சத்தை உண்டாகியுள்ளது.

இது குறித்து நேற்று பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் சமூக இடைவெளியை பின்பற்றி நடந்தது, அப்போது உள்துறை அமைச்சகம் சார்பில் பிரதமருக்கு சில பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன, அதில் ஊடகங்கள் நடப்பு செய்தியை மட்டும் ஒளிபரப்பு செய்யவும், விவாதங்களில் அரசியல் பேசுவதை தவிர்க்கும் வகையில் அவசரகால சட்டம் கொண்டுவரவேண்டும் எனவும்..,

அத்துடன் துணை ராணுவம் ஒவ்வொரு மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் காவலர்களுடன் சேர்ந்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும் தனது அமைச்சகம் சார்பில் பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது, மேலும் இறப்பு விகிதம் சராசரியை காட்டிலும் அதிகரிக்கும் பட்சத்தில் கடுமையான சட்டங்களை பிறப்பித்து முழு ஊரடங்கை கொண்டுவரவேண்டும் எனவும் வலியுறுத்தபட்டுள்ளது.

அத்துடன் நிதி அமைச்சகம் சார்பில் கொரோனா தடுப்பு மருத்துவ கட்டுப்பாட்டை மேம் படுத்த 1.30 லட்சம் கோடி முதல் 2 லட்சம் கோடி வரை ஒதுக்குவது குறித்தும் அதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது, இதனையடுத்து பிரதமர் இந்த வார இறுதியில் மீண்டும் மக்களை சந்தித்து நிவாரண உதவிகள், சட்டங்கள் குறித்து அறிவிப்பினை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

கொரோனா குறித்து தேவையற்ற வதந்திகள், போலி செய்திகளை ஊடகங்கள் பரப்பினால் சில நாட்கள் ஒளிபரப்பினை நிறுத்திவைக்க கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

©TDTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here