ஆளுநர் தனி பிரிவில் 27 வயது இளைஞர் !

செய்திகளை பகிர உதவுங்கள்..

Loading...

சென்னை.,

தமிழகத்தை சேர்ந்த 27 வயது பொறியியல் பட்டதாரி இளைஞர் உதயகுமார் கடந்த மே மாதம் நடைபெற்ற வீட்டு வசதி துறைக்கான நேர்முக தேர்வில் வெற்றி பெற்று தற்போது காஞ்சிபுரம் சரகத்தில் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் ஆளுநர் அலுவலகத்திற்கான சிறப்பு அலுவலர்கள் பட்டியலில் உதயகுமாரின் பெயர் இடம்பெற்றிருப்பது தமிழக இளைஞர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, 45 வயதை கடந்த மூத்த அதிகாரிகளே ஆளுநர் அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டுவரும் நிலையில் 27 வயது இளைஞர் பணியில் அமர்த்தப்பட்டிருப்பது ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

IAS, IPS, ரெங்கே அதிகாரிகளுடன் தானும் பணிபுரிவது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும், இதற்கு தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவே காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார் உதயகுமார்.

தற்போது பணியில் இருக்கும் வீட்டு வசதித்துறையில் இருந்து வருகின்ற ஆகஸ்ட் 26 நாள் பணியிட மாறுதல் பெற்று ஆளுநர் அலுவலகத்தில் பணியில் ஈடு பட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...
Read   #breaking நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள் போட்டுத்தள்ளிய அமெரிக்கா கொடூரமாக கொல்லப்பட்ட ஒசாமா மகன் மீண்டும் பாகிஸ்தான் சிக்கியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!